தனியார் நிறுவனங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை கலெக்டர் வீரராகவராவ் பணி ஆணை வழங்கினார்


தனியார் நிறுவனங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை கலெக்டர் வீரராகவராவ் பணி ஆணை வழங்கினார்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:00 PM GMT (Updated: 17 Dec 2016 2:37 PM GMT)

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டம் ஆகியவற்றின் சார்பில் ஊரக பகுதிகளில் வேலை இல்லாமல் உள்ள பட்டதாரி, படித்த இளைஞர்களுக்கான இலவச வேலை வாய்ப்

திருப்பரங்குன்றம்,

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டம் ஆகியவற்றின் சார்பில் ஊரக பகுதிகளில் வேலை இல்லாமல் உள்ள பட்டதாரி, படித்த இளைஞர்களுக்கான இலவச வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குனர் அருள்மணி, புதுவாழ்வு திட்ட மேலாளர் சுபாஷ் மங்களம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஆசிக், அலமேலு அம்மாள், ஹைடெக் அராய் உதவி பொது மேலாளர் சேதுராமன், மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் 20 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்தனர்.

இந்த முகாமில் 2 ஆயிரத்து 603 இளைஞர்கள் தங்களது படிப்பு சான்றிதழ்களுடன் வந்து பதிவு செய்து கொண்டனர். அதில் 574 பேருக்கு உடனடி வேலை வாய்ப்பும், 136 பேருக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகராவ் கலந்து கொண்டு, தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் சரவணபெருமாள் துணைதாசில்தார் குணசேகரன், சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story