நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி 4 லட்சம் சரிவு கொள்முதல் விலை ‘கிடுகிடு’ உயர்வு


நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி 4 லட்சம் சரிவு கொள்முதல் விலை ‘கிடுகிடு’ உயர்வு
x
தினத்தந்தி 17 Dec 2016 3:11 PM GMT (Updated: 2016-12-17T20:41:28+05:30)

நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை உற்பத்தி 4 லட்சம் வரை சரிவடைந்து உள்ளது. இதனால் அதன் கொள்முதல் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது. முட்டை உற்பத்தி சரிவு நாமக்கல் மண்டலத்தில் 1,100–க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4 கோடிக்கும் மேற்ப

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை உற்பத்தி 4 லட்சம் வரை சரிவடைந்து உள்ளது. இதனால் அதன் கொள்முதல் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது.

முட்டை உற்பத்தி சரிவு

நாமக்கல் மண்டலத்தில் 1,100–க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் கோழிப்பண்ணை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சமீப காலமாக முட்டை உற்பத்தி சரிவடைந்த நிலையில் உள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஜூன் மாதம் நாள்ஒன்றுக்கு சராசரியாக 2 கோடியே 82 லட்சம் முட்டைகளும், ஜூலை மாதம் 2 கோடியே 78 லட்சம் முட்டைகளும், ஆகஸ்டு மாதம் 2 கோடியே 77 லட்சம் முட்டைகளும், செப்டம்பர் மாதம் 2 கோடியே 76 லட்சம் முட்டைகளும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் தினசரி சராசரியாக 2 கோடியே 78 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. ஆனால் அது கடந்த மாதம் (நவம்பர்) 4 லட்சம் குறைந்து 2 கோடியே 74 லட்சமாக சரிவடைந்து உள்ளது.

முட்டை உற்பத்தி குறைந்து கொண்டே வருவதற்கு, மூலப்பொருட்களின் விலைஏற்றம் காரணமாக தொழிலில் ஏற்பட்டு வரும் நஷ்டத்தை தவிர்க்க குஞ்சு விடுவதை பண்ணையாளர்கள் குறைத்துக் கொண்டதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

கொள்முதல் விலை ‘கிடுகிடு’ உயர்வு

முட்டை உற்பத்தி குறைந்து வரும் சூழ்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக முட்டையின் கொள்முதல் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் முட்டையின் சராசரி கொள்முதல் விலை 372 காசுகளாக இருந்தது. அது நவம்பர் மாதம் சராசரி கொள்முதல் விலை 18 காசுகள் உயர்ந்து, 390 காசுகளாக அதிகரித்து உள்ளது.


Next Story