நாட்டறம்பள்ளி அருகே சைக்கிள் மீது கார் மோதல்; பூண்டு வியாபாரி பலி மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


நாட்டறம்பள்ளி அருகே சைக்கிள் மீது கார் மோதல்; பூண்டு வியாபாரி பலி மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 17 Dec 2016 3:23 PM GMT (Updated: 2016-12-17T20:53:19+05:30)

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்களாபுரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45), பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இவர், ஜங்களாபுரத்தில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது ஓசூரில

நாட்டறம்பள்ளி,

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்களாபுரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45), பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இவர், ஜங்களாபுரத்தில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது ஓசூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story