அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை தீர்மானம்


அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை தீர்மானம்
x
தினத்தந்தி 17 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-17T20:57:34+05:30)

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி,

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதா பேரவை கூட்டம்

கோவில்பட்டியிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், செய்தி விளம்பர துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், வருவாய் துறை அமைச்சருமான உதயகுமார், திருவண்ணாமலை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சசிகலா பொறுப்பு ஏற்க...


மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்தை சட்டசபையில் வைக்க வேண்டும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா திருவுருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும், சென்னையில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் நடந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.

மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் தாயாக, தோழியாக, உறுதுணையாக இருந்த சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை குழு தலைவர் மாணிக்கராஜா, எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜ், உமா மகேசுவரி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், செல்வகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், சிவபெருமாள், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் ஈசுவரபாண்டியன், வண்டானம் கருப்பசாமி, நிலவள வங்கி தலைவர் கணபதி பாண்டியன், கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story