அந்தியூர் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்த கட்டிட தொழிலாளி கைது


அந்தியூர் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்த கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 17 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-18T00:30:49+05:30)

அந்தியூர் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் 7½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியபோது கீழே விழுந்த செல்போன் மூலம் துப்பு துலக்கி போலீசார் பிடித்தனர். 7½ சங்கிலி பறிப்பு ஈரோடு மாவ

அந்தியூர்

அந்தியூர் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் 7½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியபோது கீழே விழுந்த செல்போன் மூலம் துப்பு துலக்கி போலீசார் பிடித்தனர்.

7½ சங்கிலி பறிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சென்னம்பட்டி இரட்டைக்கரடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. மேலும் இவர் சென்னம்பட்டியில் உரக்கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி ஜெயம்மாள் (வயது 42). இவர்களுடைய 2 மகள்களும் வெளியூரில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய வாழைத்தோட்டத்தில் விவசாய வேலைகளை ஜெயம்மாள் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மருத்துவ தேவைக்காக ஒரு வாழைப்பூ தேவைப்படுகிறது என ஜெயம்மாளிடம் கூறினார். இதைத்தொடர்ந்து வாழைப்பூ பறிப்பதற்காக தோட்டத்தின் உள் பகுதிக்கு ஜெயம்மாள் சென்றார். அவருக்கு பின்னாலேயே சென்ற மர்ம நபர் திடீரென்று ஜெயம்மாளின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே ஜெயம்மாள், ‘திருடன், திருடன்’ என்று சத்தம் போட்டு கத்தினார்.

செல்போன் மூலம் துப்பு துலங்கியது

அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர் ஓடிச்சென்று சிறிது தூரத்தில் நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.

இதுபற்றி அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வாழைத்தோட்டத்துக்குள் கிடந்த ஒரு செல்போனை போலீசார் கைப்பற்றினர். உடனே அந்த செல்போனை மீட்ட போலீசார் அதன் மூலம் துப்பு துலக்கினர். அப்போது அந்த செல்போன் அம்மாபேட்டை அருகே உள்ள ஓலையூரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான பழனிச்சாமி (32) என்பவருடையது என தெரியவந்தது.

கைது

இதைத்தொடர்ந்து ஓலையூர் விரைந்து சென்று வீட்டில் இருந்த பழனிச்சாமியை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ‘தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயம்மாளின் 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றதை’ ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பழனிச்சாமியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 7½ பவுன் தாலி சங்கிலியையும் மீட்டனர்.


Next Story