திங்களூர் அருகே சாலையோரம் குப்பைகளை கொட்டிய டிராக்டர் சிறைபிடிப்பு


திங்களூர் அருகே சாலையோரம் குப்பைகளை கொட்டிய டிராக்டர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-18T00:30:50+05:30)

திங்களூர் அருகே சாலையோரம் குப்பைகளை கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். டிராக்டர் சிறைபிடிப்பு ஈரோடு அருகே உள்ளது நசியனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டரும், தனியாருக்கு சொந்தமான டிராக்டரும் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதிய

பெருந்துறை

திங்களூர் அருகே சாலையோரம் குப்பைகளை கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

டிராக்டர் சிறைபிடிப்பு

ஈரோடு அருகே உள்ளது நசியனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டரும், தனியாருக்கு சொந்தமான டிராக்டரும் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சேகரித்த குப்பை கழிவுகளை ஏற்றிக்கொண்டு திங்களூர் அருகே உள்ள வாவிக்கடை தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டின.

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ஓடிச்சென்று 2 டிராக்டர்களையும் சிறைபிடிக்க முயன்றனர். அதில் தனியார் டிராக்டர் மட்டும் சிறைபிடிக்கப்பட்டது. பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டர் தப்பிச்சென்றுவிட்டது.

இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

குப்பைகள் கொட்டப்படுகிறது

நசியனூர் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினமும் இரவு நேரங்களில் டிராக்டர் டிரெய்லரில் ஏற்றப்பட்டு கடந்த ஒரு மாதமாக பேரூராட்சி எல்லையில் உள்ள திருவாச்சி ஊராட்சி அருகே உள்ள வாவிக்கடை தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே சுமார் 500 அடி நீளத்துக்கு மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் மீது பேரூராட்சி பணியாளர்கள் தீ வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறுவதுடன், சுற்றுப்புற சூழ்நிலையையும் கெடுத்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் தங்கமுத்து பேரூராட்சி செயல் அதிகாரியிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் டிராக்டரை சிறைபிடித்தோம்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.

சிறைபிடிக்கப்பட்ட டிராக்டர் திங்களூர் ஊராட்சி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு அந்த டிராக்டர் டயரின் காற்று பிடுங்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து பெருந்துறை வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story