ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணையை தூர்வார வேண்டும் விவசாயிகள் வேண்டுகோள்


ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணையை தூர்வார வேண்டும் விவசாயிகள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:30 PM GMT (Updated: 17 Dec 2016 7:30 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு மேற்கு தொடர்ச்சி மலையில் பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடி. தற்போது அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை. 1974–ம் ஆண்டு கட

சத்திரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு மேற்கு தொடர்ச்சி மலையில் பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடி. தற்போது அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை. 1974–ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை இதுவரை தூர்வாரப்படவில்லை. இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 34 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. பரப்பலாறு அணை ஒட்டன்சத்திரத்தின் முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது. ஒட்டன்சத்திரத்தில் உள்ள தாசரிபட்டி, முத்து பூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமச்சமுத்திரம், சவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய 6 குளங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையில் சுமார் 30 அடி உயரம் வரை வண்டல்மண் மற்றும் கழிவுகள் உள்ளதால் மொத்த நீர்தேக்க அளவை சேமிக்க முடியாத நிலை உள்ளது. பரப்பலாறு அணை தூர் வாருவது சம்மந்தமாக பொதுப்பணித்துறையினர், மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையினரிடம் அனுமதி கோரியுள்ளனர். இந்திய சுற்றுச்சூழல் துறை பரப்பலாறு அணையை தூர்வார அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு சார்பில் தூர்வார ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் மத்திய வனத்துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு வறண்ட பரப்பலாறு அணையை தூர் வாரினால் வரும் காலத்தில் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு தண்ணீரை 100 சதவீதம் பயன்படுத்தலாம் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story