நிலககோட்டை பகுதியில் வைகை ஆறு வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு


நிலககோட்டை பகுதியில் வைகை ஆறு வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 17 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-18T01:00:01+05:30)

நிலககோட்டை பகுதியில் வைகை ஆற்றுப்படுகை வறண்டு போனதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றுப்படுகை திண்டுக்கல் மாவட்டம் நிலககோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக வைகை ஆறு விளங்குகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், வைக

நிலககோட்டை,

நிலககோட்டை பகுதியில் வைகை ஆற்றுப்படுகை வறண்டு போனதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வைகை ஆற்றுப்படுகை

திண்டுக்கல் மாவட்டம் நிலககோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக வைகை ஆறு விளங்குகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், வைகை ஆற்றுப்படுகை வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக ஊராட்சி, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகங்கள் முலம் அமைககப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு போய் விட்டது.

எனவே நிலககோட்டை பகுதியில், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில், கிராமங்களில் வினியோகம் செய்யப்படுகிற தண்ணீர் பொதுமக்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. இதனால் குடிநீர் குழாய்களின் அருகே சண்டை போடும் காட்சியை ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

3 இடங்களில் தடுப்பணைகள்

தண்ணீருக்காக, பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை குறி வைத்து தனியார் சிலர், ஒரு குடம் தண்ணீர் ரூ.5–ககு விற்பனை செய்து வருகின்றனர். கடும் வறட்சி காரணமாக கால்நடை வளர்ப்பு தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த விலைக்கு, கால்நடைகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நிலவும் வறட்சியை போக்கும் வகையில், வைகை ஆற்றின் குறுக்கே ரெங்கப்பநாயககன்பட்டி, குன்னுவாரன் கோட்டை, பேரணை பகுதி ஆகிய இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் இந்த கோரிக்கை கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருந்து வருகிறது. இதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக எதிரொலிக்கிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கிராமம், கிராமமாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story