குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நர்சுகள் போராட்டம்


குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நர்சுகள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2016 11:15 PM GMT (Updated: 2016-12-18T01:38:29+05:30)

குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நர்சுகள் போராட்டம் சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 100–க்கும் மேற்பட்ட நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். ஆஸ்பத்திரியில் துப்ப

ராயபுரம்,

குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நர்சுகள் போராட்டம்

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 100–க்கும் மேற்பட்ட நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். ஆஸ்பத்திரியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சரிவர பணிகளை மேற்கொள்ளாததால் ஆஸ்பத்திரி வளாகம் குப்பை சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும் கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை கண்டித்து நேற்று காலை ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் அருகே 100–க்கும் மேற்பட்ட நர்சுகள் தங்களது பணிகளை புறக்கணித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

2 மணி நேரம் பரபரப்பு

உடனே ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு நர்சுகள் பணிக்கு சென்றனர். நர்சுகளின் திடீர் போராட்டத்தால் அங்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

வங்கி ஊழியர் பலி

* மீன்பிடிக்க சென்று மாயமான காசிமேடு மீனவர்களை 2–வது நாளாக கடலோர காவல்படையினர் தேடினர்.

* தண்டையார்பேட்டையில் புயலால் சாய்ந்த மரங்கள் அகற்றப்படாததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை தி.மு.க.வினர் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரி மனு பெற மறுத்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

* முகப்பேரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த முகப்பேரைச் சேர்ந்த வங்கி ஊழியர் லட்சுமி (55) சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். இதுதொடர்பாக குமரகுரு (33) என்பவர் கைது செய்யப்பட்டார்.

* தேனாம்பேட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த தம்மம்நாயுடு (53) கைது செய்யப்பட்டார்.


Next Story