பணம் இல்லை என்றதால் ஆத்திரம் வங்கி முன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


பணம் இல்லை என்றதால் ஆத்திரம் வங்கி முன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-18T01:53:48+05:30)

பணம் இல்லை என்றதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், வங்கி முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பணம் இல்லை செங்குன்றம் பைபாஸ் சாலை அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செங்குன்றம் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு அரிசி ஆலை உரிமையாளர்கள், பொதுமக்கள் என 1,500–

செங்குன்றம்,

பணம் இல்லை என்றதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், வங்கி முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணம் இல்லை

செங்குன்றம் பைபாஸ் சாலை அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செங்குன்றம் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு அரிசி ஆலை உரிமையாளர்கள், பொதுமக்கள் என 1,500–க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக வங்கியில் பொதுமக்கள் பணம் எடுக்க சென்ற போது, ‘‘ரிசர்வ் வங்கி எங்கள் கிளைக்கு பணம் வினியோகம் செய்யவில்லை. இதனால் பணம் இல்லை’’ என்று கூறி பொதுமக்களை வங்கி ஊழியர்கள் அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

சனிக்கிழமை வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக பணம் வழங்கப்படும் என வங்கி கிளை மேலாளர் கூறியதாகவும் தெரிகிறது. அதை நம்பி நேற்று காலை முதலே 200–க்கும் மேற்பட்டோர் வங்கி முன் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

ஆனால் காலை 11.30 மணியளவில் ‘வங்கியில் இன்றும்(அதாவது நேற்று) பணம் இல்லை’ என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், வங்கி எதிரே சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் சமாதானம் செய்ததால் சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள், வங்கி முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை கண்டிப்பாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story