வார்தா புயலால் பாதிப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் 29,616 வீடுகள் சேதம் அமைச்சர் தகவல்


வார்தா புயலால் பாதிப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் 29,616 வீடுகள் சேதம் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-18T02:37:53+05:30)

வார்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 29,616 வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஆய்வு வார்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. சேத விவரங்களை அறியும் வகையில் திருவள்ளூர் மாவட்

பொன்னேரி,

வார்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 29,616 வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ஆய்வு

வார்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. சேத விவரங்களை அறியும் வகையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவினர் சேதம் அடைந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். இதனையடுத்து தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் காட்டுப்பள்ளி, காலாஞ்சி, அத்திப்பட்டு, மீஞ்சூர் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் பொன்னேரியில் உள்ள புயல் நிவாரண முகாமில் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் காமராஜ் பேசும்போது கூறியதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சிகளில் 90 சதவீதமும், பேரூராட்சிகளில் 69 சதவீதமும், ஊராட்சிகளில் 44 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 14,069 மின்கம்பங்கள், 116 டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்துள்ளன.

தங்கு தடையின்றி குடிநீர்

குடிநீர் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்தை காக்கும் வகையில் கொசுமருந்து தெளிக்கப்பட்டு மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் வார்தா புயலால் 29,616 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் அமைச்சர்கள் பென்ஜமின், அன்பழகன், ஜெயக்குமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, திருவள்ளூர் தொகுதி எம்.பி. வேணுகோபால், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story