கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுவிற்பனை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது


கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுவிற்பனை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-18T03:06:01+05:30)

கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுவிற்பனை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுவிற்பனை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில், சிறுவிற்பனை தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் துரைக்கண்ணு தலைமை தாங்கினார். வைத்தீஸ்வரன்கோவில் சங்க தலைவர் கண்ணன், இணை செயலாளர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் நாகை மாலி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தற்போது வியாபாரம் செய்யும் அதே இடத்திலேயே சாலையோர வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு, நகரை அழகுப்படுத்துதல் என்ற பெயரில் கடைகளை இடமாற்றம் செய்வது, காலிசெய்வது போன்ற நடவடிக்கைகளை கைவிட கேட்டு கொள்வது. சாலையோர வியாபாரிகள் அனைவரையும் முழுமையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கிய பின்னர் வியாபார குழுவுக்கான தேர்தலை நடத்த வேண்டும். நகர வியாபார குழுவில் உள்ள 15 பேரில் 6 பேர் சாலையோர வியாபாரிகள் என்பதை மூன்றில் 2 பங்கு என அரசாணையை திருத்தம் செய்ய கேட்டு கொள்வது. சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் சட்டம் குறித்து அரசு அதிகாரிகள், காவல் துறையினருக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்கத்தின் கவுரவ தலைவர் ஸ்டாலின், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிமணி, மின்திட்ட செயலாளர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story