ரேஷன் கார்டுகளின் பெயர் பட்டியல்படி ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா? முசிறி பகுதியில் அலுவலர்கள் ஆய்வு


ரேஷன் கார்டுகளின் பெயர் பட்டியல்படி ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா? முசிறி பகுதியில் அலுவலர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-18T03:06:51+05:30)

ரேஷன் கார்டுகளின் பெயர் பட்டியல்படி ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா? முசிறி பகுதியில் அலுவலர்கள் ஆய்வு

முசிறி,

திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவின் பேரில் முசிறி கோட்டாட்சி தலைவர் ஜானகி, தாசில்தார் பாலாஜி ஆகியோர் மேற்பார்வையில் முசிறி பகுதியில் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர் பட்டியல் படி ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றியும், குடும்ப உறுப்பினர் களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பது பற்றியும், குடியிருக்கும் பகுதி, ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வாங்கும் விவரம் ஆகியவை பற்றியும், அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்கள் இணைக்கப்படாமல் இருந்தால் உடனடியாக இணைத்து கொள்ளுமாறும், முகவரி மாற்றம், பெயர் நீக்கல் ஆகியவை செய்யப்படாமல் இருந்தால் அதனை சரி செய்து கொள்ளவும் வருவாய்த்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கவும், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு அடிப்படை ஆதாரங்களை நூறு சதவீதம் உறுதிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வட்ட வழங்கல் அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கள ஆய்வு பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செய லாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story