பங்களாபுதூர் நாக மாரியம்மன் கோவிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை திரளான பெண்கள் கலந்து கொண்டனர்


பங்களாபுதூர் நாக மாரியம்மன் கோவிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை திரளான பெண்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-18T03:07:35+05:30)

பங்களாபுதூர் நாக மாரியம்மன் கோவிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை திரளான பெண்கள் கலந்து கொண்டனர்

நச்சலூர்,

பங்களாபுதூரில் உள்ள நாக மாரியம்மன் கோவிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குத்துவிளக்கு பூஜை

குளித்தலை அருகே பங்களாபுதூரில் உள்ள நாக மாரியம்மன் கோவிலில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 1,008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நாகமாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் இனுங்கூர், சுக்காம்பட்டி, நச்சலூர், சவாரிமேடு, திருச்சாப்பூர், பங்களாபுதூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் தங்களது வீட்டில் இருந்து குத்துவிளக்கு மட்டும் எடுத்துவந்தனர். பின்னர் பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், மஞ்சள், குங்குமம், தாலி கயிறு, பூ, பொங்கல் உள்பட 13 வகையான பொருட்கள் கோவில் சார்பில் வழங்கப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்

தொடர்ந்து சந்திரசேகர் சிவாச்சாரியார் மந்திரங்கள் ஓதிய பின்னர் அனைத்து குத்துவிளக்குகளும் ஏற்றப்பட்டது. பின்னர் பக்தி பாடல்கள் பாடியும், பெண்கள் கும்மி அடித்தும் அம்மனை வழிபட்டனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story