புதுக்கோட்டை நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டை நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-18T03:07:37+05:30)

புதுக்கோட்டை நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை போஸ்நகரில் விளையாட்டுத்திடல் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் போஸ் நகர் கிளை தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரை.நாராயணன், துணை தலைவர் சோலையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது எருமைமாடு என பேப்பரில் எழுதி முகமூடியாக அணிந்திருந்த ஒரு வாலிபரிடம் போஸ்நகரில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என மனு கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story