பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-18T03:08:27+05:30)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

பயிலரங்கம்

பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அக்கட்சியின் கிளை செயலாளர்கள்-இடைக்குழு உறுப்பினர்களுக்கான பயிலரங்கம் பெரம்பலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில துணை செயலாளர் சுப்பராயன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிவபுண்ணியம் மற்றும் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும். பெரம்பலூர் நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் கொள்ளிடம் குடிநீரை பொதுமக்களின் நலன் கருதி தினமும் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் குண்டும்-குழியுமாக காணப்படும் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

24 மணிநேரமும்...

உலக வங்கி திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அகரம்சீகூர், கிழுமத்தூர், அத்தியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏரிகளில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்க வேண் டும். பெரம்பலூர் மாவட்ட ஏ.டி.எம் மையங்களில் 24 மணி நேரமும் பணம் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அரியலூர் மாவட்ட செயலாளர் உலகநாதன், கிளைக்குழு செயலாளர்கள் ராஜேந்திரன், தியாகராஜன், கலைசெல்வன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story