வெடிமருந்து குடோனை கைப்பற்ற வரும் தீவிரவாதிகளை பிடிப்பது குறித்த ஒத்திகை


வெடிமருந்து குடோனை கைப்பற்ற வரும் தீவிரவாதிகளை பிடிப்பது குறித்த ஒத்திகை
x
தினத்தந்தி 17 Dec 2016 11:00 PM GMT (Updated: 17 Dec 2016 9:38 PM GMT)

வெடிமருந்து குடோனை கைப்பற்ற வரும் தீவிரவாதிகளை பிடிப்பது குறித்த ஒத்திகை

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடியில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான வெடி மருந்து குடோன் உள்ளது. போலீஸ் பாதுகாப்பில் உள்ள இந்த வெடிமருந்து குடோனை தீவிரவாதிகள் கைப்பற்ற வந்தால் அவர்களை பிடிப்பது எப்படி? என்பது குறித்த ஒத்திகை நேற்று நடைபெற்றது. தீவிரவாதிகளை மறைந்து இருந்து பிடிப்பது, கமோண்டோ படையினர் துப்பாக்கியுடன் தேடுவது, போலீசாரை தாக்க முயற்சிக்கும் தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்தல் மற்றும் தீ விபத்தை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து போலீசார் நேரடியாக செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்கு இயற்கை எரிவாயு எண்ணெய் நிறுவன துணை பொது மேலாளர் கருப்பையா தலைமை தாங்கினார். ஓ.என்.ஜி.சி. பாதுகாப்புபடை முதுநிலை அதிகாரி பவித்ரன், மேலாளர் ரானா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓ.என்.ஜி.சி. வெடி மருந்து குடோன் பொறுப்பாளர்கள், ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன், ஊர்க்காவல்படை மண்டல தளபதி ராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story