சபரிமலை சாஸ்தா திருவீதியுலாவின்போது பல்வேறு வேடமணிந்து வந்த பக்தர்கள்


சபரிமலை சாஸ்தா திருவீதியுலாவின்போது பல்வேறு வேடமணிந்து வந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:30 PM GMT (Updated: 17 Dec 2016 9:38 PM GMT)

சபரிமலை சாஸ்தா திருவீதியுலாவின்போது பல்வேறு வேடமணிந்து வந்த பக்தர்கள்

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் மணிகண்ட அய்யப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை சாஸ்தா திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வரதராஜபெருமாள் கோவிலில் காலை 9 மணியளவில் மகா சாஸ்தா மூலமந்திர ஹோமம், மகா அபிஷேகம், மதியம் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவு மூர்த்தி குருசாமி தலைமையில் அய்யப்ப பக்தர்களின் ஊர்வலம், சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அய்யப்பன், அய்யப்பனின் வாகனமான புலி, நரகாசுரன், பரமசிவன், பார்வதி, இந்திரன், இந்திராணி, மாளிகைபுரத்துஅம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் வலம் வந்தனர். வீதியுலா வரதராஜபெருமாள் கோவிலில் தொடங்கி நான்குரோடு, கடைவீதி, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம், அண்ணா சிலை வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வீதியுலாவை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Next Story