பாடையுடன் ஊர்வலமாக சென்று ஏ.டி.எம். மையத்துக்கு மாலை அணிவித்து வாலிபர் சங்கத்தினர் போராட்டம் போலீசாருடன் தள்ளு– முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


பாடையுடன் ஊர்வலமாக சென்று ஏ.டி.எம். மையத்துக்கு மாலை அணிவித்து வாலிபர் சங்கத்தினர் போராட்டம் போலீசாருடன் தள்ளு– முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Dec 2016 10:04 PM GMT (Updated: 2016-12-18T03:34:43+05:30)

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற வேண்டும். அனைத்து ஏ.டி.எம். மையத்திலும் பணம் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தஞ்சையில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடு

தஞ்சாவூர்,

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற வேண்டும். அனைத்து ஏ.டி.எம். மையத்திலும் பணம் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தஞ்சையில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாநகர தலைவர் மில்லர்பிரபு தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அருள்அரசன், நகர செயலாளர் வினித், நிர்வாகிகள் அரவிந்த்சாமி, சரவணன், வசந்த், ரீகன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தஞ்சை ரெயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே இருந்து பாடைகட்டி அதில் ஏ.டி.எம். எந்திரம் போன்று மாதிரி பெட்டியை தயார் செய்து அதை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தஞ்சை ரெயில் நிலையம் அருகே பூட்டப்பட்டு இருந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு ஒப்பாரி வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Next Story