காமராஜர் நிதி உதவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு ரூ.10 கோடி நிதி உதவி முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்


காமராஜர் நிதி உதவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு ரூ.10 கோடி நிதி உதவி முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:10 PM GMT (Updated: 2016-12-18T03:40:34+05:30)

பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவி திட்டத்தின் கீழ் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2016-2017ம் நிதி ஆண்டுக்கு ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது ரூ.10 கோடியை தனியார் கல்லூரி நிர்வாகிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தனியார் கல்லூரி

புதுச்சேரி

பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவி திட்டத்தின் கீழ் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2016-2017ம் நிதி ஆண்டுக்கு ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது ரூ.10 கோடியை தனியார் கல்லூரி நிர்வாகிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தனியார் கல்லூரி நிர்வாகிகளிடம் ரூ.10 கோடிக்கான காசோலையை வழங்கினார். இதில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.5 கோடியே 51 லட்சமும், 12 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு ரூ.4கோடியே 49 லட்சமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, உயர்கல்வித்துறை செயலாளர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story