நோணாங்குப்பம் படகு குழாமில் 80 பேர் பயணம் செய்யக்கூடிய புதிய ரக படகு சோதனை ஓட்டம்


நோணாங்குப்பம் படகு குழாமில் 80 பேர் பயணம் செய்யக்கூடிய புதிய ரக படகு சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:18 PM GMT (Updated: 2016-12-18T03:48:48+05:30)

புதுவை மாநிலத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றான அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் படகுகுழாமில் 80 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்யக்கூடிய தரைதளம் கொண்ட “பாரடைஸ் குரூஸ்” எனும் புதிய ரக படகின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி அரசு சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா பயணிகளின் நேரத்தை வீணடிக் காமல் தங்களது பொழு

அரியாங்குப்பம்,

புதுவை மாநிலத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றான அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் படகுகுழாமில் 80 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்யக்கூடிய தரைதளம் கொண்ட “பாரடைஸ் குரூஸ்” எனும் புதிய ரக படகின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

புதுச்சேரி அரசு சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா பயணிகளின் நேரத்தை வீணடிக் காமல் தங்களது பொழுதை போக்கும் எண்ணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் டிக்கெட் கவுண்டரில் சுவைப் எந்திரம் அமைக்க வேண்டும் என்று தினத்தந்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக பணமில்லா பரிவர்த்தனை எனும் முறையில் தனியார் வங்கியின் உதவியுடன் சுவைப் எந்திரம் படகு குழாமில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Next Story