வில்லியனூரில் இருந்து கோர்க்காட்டுக்கு, அரசு கலைக் கல்லூரி மாற்றப்படும் அமைச்சர் கந்தசாமி தகவல்


வில்லியனூரில் இருந்து கோர்க்காட்டுக்கு, அரசு கலைக் கல்லூரி மாற்றப்படும் அமைச்சர் கந்தசாமி தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:18 PM GMT (Updated: 2016-12-18T03:48:49+05:30)

வில்லியனூரில் இருந்து கோர்க்காட்டுக்கு அரசு கலைக் கல்லூரி மாற்றப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார். தேர்வு விகிதம் குறைவு புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பள்ளியின் துணை முதல்வர் தனசெல்வன் நேரு வரவேற்றார்.

வில்லியனூர்

வில்லியனூரில் இருந்து கோர்க்காட்டுக்கு அரசு கலைக் கல்லூரி மாற்றப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

தேர்வு விகிதம் குறைவு

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பள்ளியின் துணை முதல்வர் தனசெல்வன் நேரு வரவேற்றார். விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார். விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

அரசு பள்ளிக்கூடங்களில் தேர்வு விகிதம் குறைவாக உள்ளது. மாணவ-மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்களும் கடின உழைப்பின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை கொண்டு வரவேண்டும். கோர்க்காட்டில் அரசு கலைக்கல்லூரிக்கு 7 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

கலைக்கல்லூரி மாற்றம்

தற்போது வில்லியனூரில் உள்ள கண்ணகி அரசு பள்ளிக்கூட வளாகத்தில் இயங்கி வரும் அரசு பெண்கள் கலைக் கல்லூரி இங்கு மாற்றப்படும். புதிதாக இளங்கலை, மற்றும் முதுகலை வகுப்புகளும் தொடங்கப்படும்.

மேலும் 7 ஏக்கரில் அரசு ஆயுதக் கிடங்கும் கோர்க்காட்டில் அமைக்கப்படும். இந்தப்பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

விழாவில் காங்கிரஸ் பிரமுகர்கள் நீலகங்காதரன், வீரமுத்து, குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story