இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கைதான டாக்டர் பணி இடைநீக்கம்


இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கைதான டாக்டர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 17 Dec 2016 11:33 PM GMT (Updated: 2016-12-18T05:03:06+05:30)

மும்பை வில்லேபார்லேவில் உள்ள நானாவதி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருபவர் கயான் சோடியா. இவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சாந்தாகுருஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவ

மும்பை

மும்பை வில்லேபார்லேவில் உள்ள நானாவதி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருபவர் கயான் சோடியா. இவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சாந்தாகுருஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான கைது நடவடிக்கையை தொடர்ந்து நானாவதி மருத்துவமனை நிர்வாகம் அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. இதை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜேந்திர பட்டான்கர் தெரிவித்தார்.


Next Story