9 மாத குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் நடவடிக்கை எடுக்க தவறிய போலீஸ் அதிகாரி பணி இடைநீக்கம் மந்திரி உத்தரவு


9 மாத குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் நடவடிக்கை எடுக்க தவறிய போலீஸ் அதிகாரி பணி இடைநீக்கம்  மந்திரி உத்தரவு
x
தினத்தந்தி 17 Dec 2016 11:33 PM GMT (Updated: 17 Dec 2016 11:33 PM GMT)

9 மாத குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறிய போலீஸ் அதிகாரியை பணி இடைநீக்கம் செய்ய மந்திரி ரஞ்சித் பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். குழந்தையை தாக்கப்பட்ட சம்பவம் நவிமும்பை கார்கரில் செயல்பட்டு வரும் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு மைய

மும்பை

9 மாத குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறிய போலீஸ் அதிகாரியை பணி இடைநீக்கம் செய்ய மந்திரி ரஞ்சித் பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.

குழந்தையை தாக்கப்பட்ட சம்பவம்

நவிமும்பை கார்கரில் செயல்பட்டு வரும் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அண்மையில் துப்புரவு பணியாளர் அப்சானா சேக் என்ற பெண் ரிசிதா என்ற 9 மாத பெண் குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அப்சானா சேக் கைதாகி சிறையில் உள்ளார். ஜாமீனில் வெளியே வந்த குழந்தைகள் பாதுகாப்பு மைய பெண் உரிமையாளர் பிரியங்கா நிகம் நேற்று முன்தினம் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

மந்திரி உத்தரவு

இந்த நிலையில், குழந்தை ரிசிதாவின் பெற்றோர், சம்பவத்தின் போது தாங்கள் கொடுத்த புகாரின் மீது கார்கர் போலீஸ் நிலைய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் கோப்டே என்பவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

பெற்றோரின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்திய உள்ள நிலையில், அவரை பணி இடைநீக்கம் செய்ய மாநில உள்துறை இணை மந்திரி ரஞ்சித் பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே, மாநிலம் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை நடத்தி வருபவர்கள் தங்கள் மையத்தில் எத்தனை குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன, எத்தனை பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தங்கள் பகுதியில் போலீஸ் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


Next Story