ரூ.8.22 லட்சம் பழைய நோட்டுகளை டிக்கெட் கவுண்ட்டரில் மாற்றிய ரெயில்வே அதிகாரி மீது வழக்குப்பதிவு சி.பி.ஐ. நடவடிக்கை


ரூ.8.22 லட்சம் பழைய நோட்டுகளை டிக்கெட் கவுண்ட்டரில் மாற்றிய ரெயில்வே அதிகாரி மீது வழக்குப்பதிவு சி.பி.ஐ. நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2016 11:39 PM GMT (Updated: 17 Dec 2016 11:39 PM GMT)

ரூ.8.22 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளை டிக்கெட் கவுண்ட்டரில் மாற்றிய ரெயில்வே அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. கருப்பு பணம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8–ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதன்பின்னர் பொது

மும்பை

ரூ.8.22 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளை டிக்கெட் கவுண்ட்டரில் மாற்றிய ரெயில்வே அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

கருப்பு பணம்

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8–ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதன்பின்னர் பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை வங்கிகளில் கால் கடுக்க நின்று மாற்றி வந்தனர்.

மேலும் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அதை பல்வேறு குறுக்குவழிகளில் மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு எதிராக போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ரெயில்வே அதிகாரி மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில், மத்திய ரெயில்வேயின் சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் உதவி வணிக மேலாளரான கே.எல்.போயார் என்பவர் சட்டவிரோதமாக ரூ.8 லட்சத்து 22 ஆயிரம் பழைய நோட்டுகளை சி.எஸ்.டி. மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் மாற்றியதாக தெரிகிறது.

இது தொடர்பாக தகுந்த ஆதாரங்களும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெயில்வே அதிகாரி கே.எல்.போயார் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story