ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை: பிரதமர் மோடிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் நடிகர் அமீர்கான் வேண்டுகோள்


ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை: பிரதமர் மோடிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் நடிகர் அமீர்கான் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Dec 2016 11:39 PM GMT (Updated: 2016-12-18T05:09:23+05:30)

500, 1,000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நடிகர் அமீர்கான் வேண்டுகோள் விடுத்தார். அமீர்கான் பேட்டி இந்தி நடிகர் அமீர்கான் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்ன

மும்பை

500, 1,000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நடிகர் அமீர்கான் வேண்டுகோள் விடுத்தார்.

அமீர்கான் பேட்டி

இந்தி நடிகர் அமீர்கான் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து நடிகர் அமீர்கான் கூறியதாவது:–

500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழக்கப்பட்டதால், நான் எந்தவொரு பிரச்சினையையும் சந்திக்கவில்லை. காரணம், என்னிடம் கருப்பு பணம் கிடையாது. நான் முறையாக வரி கட்டுகிறேன். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். நான் பொருட்கள் வாங்கும்போது ‘டெபிட்’ அல்லது ‘கிரெடிட்’ கார்டுகளை பயன்படுத்துகிறேன்.

ஆதரவு

டிஜிட்டல்மயத்தையும், ஊழலை ஒழிக்க ரொக்கமற்ற பரிவர்த்தனையையும் அரசு ஊக்குவிக்கிறது. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் தடையால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இருப்பினும், நமது பிரதமர் நல்ல முடிவை எடுத்திருக்கிறார். நாம் ஒவ்வொருவரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்..

இவ்வாறு அமீர்கான் தெரிவித்தார்.

ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் கருப்பு பணத்தை ஒழிக்குமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல. ஒருவர் நற்பணிகளை செய்தால், அவருக்கு உதவி செய்ய வேண்டியது நமது கடமை. நான் சினிமா தொழிலில் இருக்கிறேன். ஆகையால், சினிமா பற்றி தான் என்னால் பேச முடியும், பொருளாதாரம் பற்றி அல்ல’’ என்று 51 வயது நடிகர் அமீர்கான் பதில் அளித்தார்.


Next Story