மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது


மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது
x
தினத்தந்தி 17 Dec 2016 11:39 PM GMT (Updated: 2016-12-18T05:09:25+05:30)

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 5–ந் தேதி நாக்பூரில் தொடங்கியது. ஏறத்தாழ 2 வாரம் நீடித்த இந்த கூட்டத்தொடர், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்த அறிக்கையை சபாநாயகர் ஹரிபாவு பாக்டே நேற்று அவையில் வா

நாக்பூர்,

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 5–ந் தேதி நாக்பூரில் தொடங்கியது. ஏறத்தாழ 2 வாரம் நீடித்த இந்த கூட்டத்தொடர், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்த அறிக்கையை சபாநாயகர் ஹரிபாவு பாக்டே நேற்று அவையில் வாசித்தார். அதில், மார்ச் 6–ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் மும்பையில் தொடங்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

குளிர்கால கூட்டத்தொடரையொட்டி 10 அமர்வுகளை சந்தித்த சட்டசபை, சுமார் 66 மணிநேரம் 40 நிமிடங்கள் செயல்பட்டது. அதேசமயம் 3 மணிநேரம் 5 நிமிடம் வரை பல்வேறு காரணங்களால் சபையின் செயல்பாடு முடங்கியது. 2 ஆயிரத்து 261 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் பெறப்பட்டு, 82 தீர்மானங்கள் மீது விவாதம் அரங்கேறியது. எம்.எல்.ஏ.க்களின் சராசரி வருகைப்பதிவு 72.2 சதவீதமாகவும், அதிகபட்ச வருகைப்பதிவு 82 சதவீதமாகவும், குறைந்தபட்ச வருகைப்பதிவு 40.8 சதவீதமாகவும் பதிவு ஆனது.

இதேபோல், 51 மணிநேரம் 40 நிமிடங்கள் வரை செயல்பட்ட மேல்–சபை, பல்வேறு பிரச்சினைகளால் 6 மணிநேரம் 45 நிமிடங்களை வீணடித்ததாக அதன் தலைவர் ராம்ரஜே நிம்பல்கர் தெரிவித்தார்.


Next Story