சட்ட திருத்தம் வருகிறது போலீசாரை தாக்கினால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மராட்டிய மேல்–சபையில் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு


சட்ட திருத்தம் வருகிறது போலீசாரை தாக்கினால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மராட்டிய மேல்–சபையில் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
x
தினத்தந்தி 17 Dec 2016 11:40 PM GMT (Updated: 2016-12-18T05:10:30+05:30)

போலீசாரை தாக்கினால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதனை நேற்று மேல்–சபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். போலீசார் மீது தாக்குதல் மராட்டியத்தில் சமூக விரோதிகளால் போலீசார் தாக்கப்படும் ச

நாக்பூர்

போலீசாரை தாக்கினால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதனை நேற்று மேல்–சபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.

போலீசார் மீது தாக்குதல்

மராட்டியத்தில் சமூக விரோதிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, மும்பையில் இரண்டு வாலிபர்கள் தாக்கியதில், போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த பிரச்சினை நேற்று மராட்டிய மேல்–சபையில் பூதாகரமாக வெடித்தது.

இதற்கு பதில் அளித்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசும்போது, ‘‘போலீசாரை தாக்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இதில், சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு, தண்டனை காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்’’ என்றார். மேலும், மாநிலத்தில் குற்ற விகிதம் சமீப நாட்களாக குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சைபர் குற்றங்கள்

அதேசமயம், இணையவழி எனப்படும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதை ஒப்புக்கொண்ட முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இதனை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகங்களில் 27 சைபர் ஆய்வகங்கள் திறக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும், போலீசாரின் வாழ்வாதாரத்தை உயர்த்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறிய அவர், போலீசாருக்காக 48 ஆயிரத்து 29 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக அப்போது தெரிவித்தார்.


Next Story