மும்பை மாநகராட்சி தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட 1,400 பேர் விருப்பம் சஞ்சய் நிருபம் தகவல்


மும்பை மாநகராட்சி தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட 1,400 பேர் விருப்பம் சஞ்சய் நிருபம் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2016 11:43 PM GMT (Updated: 2016-12-18T05:13:36+05:30)

மும்பை மாநகராட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் வினியோகிக்கப்பட்ட 2 ஆயிரம் விண்ணப்பத்தில், 1,400 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித

மும்பை

மும்பை மாநகராட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் வினியோகிக்கப்பட்ட 2 ஆயிரம் விண்ணப்பத்தில், 1,400 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விண்ணப்பத்தை நிரப்பி கட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து இருப்பதாக மும்பை நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் நேற்று நிருபர்களிடம் கூறினார். அவர்களை முன்னாள் மந்திரி சுரேஷ் ஷெட்டி தலைமையிலான கமிட்டி சந்தித்து, நேர்காணல் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.


Next Story