மாநகராட்சி தூய்மை பிரசார விளம்பர தூதராக நடிகர் சல்மான்கான் நியமனம்


மாநகராட்சி தூய்மை பிரசார விளம்பர தூதராக நடிகர் சல்மான்கான் நியமனம்
x
தினத்தந்தி 17 Dec 2016 11:43 PM GMT (Updated: 2016-12-18T05:13:36+05:30)

மும்பையில் திறந்தவெளி மலம், சிறுநீர் கழிப்பதை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல இடங்களில் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் திறந்தவெளி மலம், சிறுநீர் கழிப்பிற்கு எதிரான தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மாநகராட

மும்பை,

மும்பையில் திறந்தவெளி மலம், சிறுநீர் கழிப்பதை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல இடங்களில் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் திறந்தவெளி மலம், சிறுநீர் கழிப்பிற்கு எதிரான தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மாநகராட்சி நேற்று தொடங்கியது. இதன் விளம்பர தூதராக நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டார். நேற்று நடந்த இந்த திட்ட தொடக்க நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா நடிகர் சல்மான்கானிடம் அவர் இத்திட்ட விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே உள்பட பலர் கலந்து கொண்டனர்.Next Story