காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கும் பணிகள் தீவிரம் கலெக்டர் பேட்டி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கும் பணிகள் தீவிரம் கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 18 Dec 2016 12:00 AM GMT (Updated: 2016-12-18T05:30:01+05:30)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்தா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்தா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்தார்.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

வார்தா புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் உட்கோட்டம் அய்யம்பேட்டை பிரிவில் உள்ள முத்தியால்பேட்டை, அஞ்சூர், கோயம்பாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் கிராமங்களில் 16 மின்கம்பங்கள் நடப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாலாஜாபாத் பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் வழங்கும் பணிகள்

இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து தான் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் வார்தா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story