ஆந்திரா ஓங்கோல்–ராமநாதபுரம் இடையே 690 கிலோ மீட்டர் தூரத்தை 20 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்து புறா சாதனை


ஆந்திரா ஓங்கோல்–ராமநாதபுரம் இடையே 690 கிலோ மீட்டர் தூரத்தை 20 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்து புறா சாதனை
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-18T20:50:06+05:30)

ஆந்திரா மாநிலம் ஓங்கோல் – ராமநாதபுரம் இடையே 690 கிலோ மீட்டர் தூரத்தை 20 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்து புறா சாதனை படைத்துள்ளது. புறா பந்தயம் ராமநாதபுரம் புறா சங்கத்தின் சார்பில் 2015–16–ம் ஆண்டிற்கான புறா பந்தயம் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில

ராமநாதபுரம்,

ஆந்திரா மாநிலம் ஓங்கோல் – ராமநாதபுரம் இடையே 690 கிலோ மீட்டர் தூரத்தை 20 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்து புறா சாதனை படைத்துள்ளது.

புறா பந்தயம்

ராமநாதபுரம் புறா சங்கத்தின் சார்பில் 2015–16–ம் ஆண்டிற்கான புறா பந்தயம் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில் முதல்கட்டமாக தஞ்சை–ராமநாதபுரம் இடையேயான 160 கிலோ மீட்டர் தூரத்திற்கான போட்டியில் 2 மணி நேரம் 4 நிமிடங்களில் கடந்து வீரமணி என்பவருடைய புறா முதலிடமும், அப்துல்சுக்கூரின் புறா 2–வது இடமும், ஆரிபு என்பவருடைய புறா 3–வது இடமும் பிடித்தன.

இதனை தொடர்ந்து விழுப்புரம்–ராமநாதபுரம் இடையேயான 290 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற போட்டியில் அப்துல் சுக்கூரின் புறா 3 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்து முதலிடமும், சரவணக்குமரின் புறாக்கள் 2,3–வது இடமும் பிடித்தன. 3–வது கட்டமாக தாம்பரம்–ராமநாதபுரம் இடையே 415 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற போட்டியில் சரவணக்குமாரின் புறா 5 மணி 53 நிமிடங்களில் கடந்து வந்து முதலிடமும், வீரமணியின் புறா 2–வது இடமும், சரவணக்குமாரின் புறா 3–ம் இடமும் பிடித்தன.

சாதனை

இதனை தொடர்ந்து கூடூர் முதல் ராமநாதபுரம் வரையிலான 540 கிலோ மீட்டர் தூரத்திற்கான போட்டியில் அப்துல் சுக்கூரின் புறாக்கள் முறையே 8 மணி 8 நிமிடங்களில் கடந்து வந்து முதலிடமும், 2–வது இடமும் பிடித்தன. 3–வது இடத்தை வீரமணியின் புறா பிடித்தது. 5–வது கட்டமாக நடைபெற்ற போட்டியில் ஆந்திரா ஓங்கோல் – ராமநாதபுரம் இடையே 690 கிலோ மீட்டர் தூரம் போட்டியில் சரவணக்குமாரின் புறா 20 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்து வந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

போட்டிகளில் வெற்றிபெற்ற புறாக்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. நிராமநாதபுரம் புறா சங்க தலைவர் பாலா தலைமை வகித்தார். ஏ.வி.எம்.எஸ். பள்ளி தாளாளர் ஜெயக்குமார், தொழிலதிபர் சீனிஇப்ராம்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரூபஸ் வரவேற்று பேசினார். புறா பந்தயத்தில் வெற்றி பெற்ற புறாக்களுக்கு பரிசுகளும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற சரவணக்குமாருக்கு பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது. முடிவில் பொருளாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.


Next Story