தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 100 யானைகளை, கர்நாடகாவிற்கு விரட்டும் பணி தீவிரம்


தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 100 யானைகளை, கர்நாடகாவிற்கு விரட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-18T21:05:12+05:30)

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 100 யானைகளையும், கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 100 யானைகள் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவில் இருந்து 100 யானைகள், கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்க

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 100 யானைகளையும், கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

100 யானைகள்

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவில் இருந்து 100 யானைகள், கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்தன. இந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. ஓசூர் சானமாவு, போடூர், ஊடேதுர்க்கம், ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில் பிரிந்து கிடந்த இந்த 100 யானைகளையும் வனத்துறையினர் ஒன்றாக சேர்க்கும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டனர்.

மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் பலனாக தற்போது 100 யானைகளும் நொகனூர் காப்பு காடு அருகில் ஒன்றாக தஞ்சம் அடைந்துள்ளன.

விரட்டும் பணி தீவிரம்

இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் தேன்கனிக்கோட்டை, ஓசூர், உரிகம், அஞ்செட்டி ஆகிய வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறையினர் 60–க்கும் மேற்பட்டவர்கள், வேட்டை தடுப்பு குழுவினர் நொகனூர் காப்பு காட்டில் முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் 100 யானைகளையும் கர்நாடக வனப்பகுதிக்கு மீண்டும் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை விரட்டும் பணி நடந்து வருகிறது. ஒரிரு நாட்களில் இந்த 100 யானைகளும் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதிக்கு விரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story