கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விருத்தாசலத்தில் நடைபெறும் போராட்டத்தில் விவசாயிகள் திரளாக கொள்ள வேண்டும் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விருத்தாசலத்தில் நடைபெறும் போராட்டத்தில் விவசாயிகள் திரளாக கொள்ள வேண்டும் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 18 Dec 2016 3:54 PM GMT (Updated: 18 Dec 2016 3:54 PM GMT)

தமிழக ஜனநாயக விவசாயிகள் சங்கம், மணிமுக்தாறு நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. இதற்கு மணிமுக்தாறு நீர்ப்பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தனவேல் தலைமை தாங்கினார். தமிழக ஜனநாயக விவசாயிகள் சங்க ராமர் முன்னி

விருத்தாசலம்,

தமிழக ஜனநாயக விவசாயிகள் சங்கம், மணிமுக்தாறு நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. இதற்கு மணிமுக்தாறு நீர்ப்பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தனவேல் தலைமை தாங்கினார். தமிழக ஜனநாயக விவசாயிகள் சங்க ராமர் முன்னிலை வகித்தார். நாகராஜ், ராஜேந்திரன், செல்வராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடலூர் மாவட்டம் சுனாமி, கனமழை, புயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடும், விவசாயி ஒருவர் உயிர்வாழ ரூ.20 ஆயிரம் என மொத்தம் 40 ஆயிரம் வழங்கிட அரசு முன்வரவேண்டும், விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த விவசாயிகளுக்கு வங்கியில் வட்டியில்லா கடன் உள்ளிட்ட சலுகைகளை அறிவிக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று(திங்கட்கிழமை) விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு விருத்தாசலம் கோட்டாட்சியரை சந்தித்து மனு கொடுக்கும் போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து அனைத்து விவசாயிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story