சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை பொது மக்கள் மடக்கி பிடித்தனர்


சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை பொது மக்கள் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 18 Dec 2016 9:45 PM GMT (Updated: 2016-12-18T22:02:07+05:30)

சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மோட்டார் சைக்கிள் திருட்டு சின்னசேலத்தில் சேலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு வீட்டு அருகே தனது மோட்டார

சின்னசேலம்,

சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

சின்னசேலத்தில் சேலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு வீட்டு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் ஒருவர் திருடிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இதைபார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த மணிவாசகம் என்பவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி பொது மக்கள் மற்றும் சக்திவேல் ஆகியோர் ஒன்று சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபரை மடக்கி பிடித்து சின்னசேலம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்டவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த கோபி மகன் மஞ்சுநாதன் (20) என்பது தெரிந்தது. மேலும் அவர் மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து போலீசார் மஞ்சுநாதனை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மஞ்சுநாதன் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளரா என்று அவரிடம் மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story