திருமங்கலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


திருமங்கலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-18T22:15:18+05:30)

திருமங்கலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் பற்றாக்குறை திருமங்கலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் கிணற்று நீரை பயன்படுத்தி வந்தனர். கிணற்று நீர் ஓரளவு உவர்ப்பாக

திருமங்கலம்,

திருமங்கலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் பற்றாக்குறை

திருமங்கலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் கிணற்று நீரை பயன்படுத்தி வந்தனர். கிணற்று நீர் ஓரளவு உவர்ப்பாக இருந்தாலும், அதை காய்ச்சி பயன்படுத்தி வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சோழவந்தான் முள்ளிப்பள்ளம் வைகை ஆற்றில் 3 கிணறுகளை தோண்டியது. அங்கிருந்து நீரேற்றம் செய்து திருமங்கலம் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. போதிய மழை இல்லாததாலும், அதிக குடியிருப்புகள் ஏற்பட்டதாலும், மேலும் சில காரணங்களாலும் திருமங்கலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

குடிநீர் பற்றாக்குறையை போக்க சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றில் 9 கிணறுகள் தோண்டப்பட்டது. அங்கிருந்து தண்ணீர் ஏற்றப்பட்டு செக்கானூரணி அருகே உள்ள பன்னியான் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட பெரிய அளவிலான தரை தொட்டியில் சேமிக்கப்பட்டது. அங்கிருந்து திருமங்கலம் நகரில் 13 மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது

கடந்த 2 ஆண்டுகளாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலும் குடிநீர் பெறப்பட்டு நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போதுமேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் விடப்படாததால் மதுரை வரும் வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது.

வைகையில் வரும் தண்ணீர் தான் ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும். தற்போது கிணற்றில் தண்ணீர் குறைவாக உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நீர் ஊறிய பின் குடிநீர் ஏற்றப்பட்டு திருமங்கலம் நகருக்கு வினியோகிக்கப்படுகிறது. அடுத்த 2 மாதங்களுக்கு மழை பெய்யவில்லை என்றால் இந்த கிணறுகளில் முழுமையாக தண்ணீர் வற்றிவிடும் என கூறப்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

இந்தநிலையில் திருமங்கலத்திற்கு குடிநீர் வரும் பைப்புகளில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் குடிநீர் நகரில் வினியோகம் செய்வது தடைபடுகிறது. மேலும், குடிநீர் பிரிவில் பிட்டர் ஒருவர் மட்டுமே உள்ளார். பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எனவே தற்போது கிடைத்துவரும் குடிநீரை முறையாக வினியோகிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். முள்ளிப்பள்ளம் வைகை ஆற்றில் உள்ள கிணறு செயல்படாமல் இருப்பதால், அதை சரிசெய்து குடிநீர் பற்றாக்குறையை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story