கடமலை–மயிலை ஒன்றியத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள் கர்ப்பிணி பெண்கள் அவதி


கடமலை–மயிலை ஒன்றியத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள் கர்ப்பிணி பெண்கள் அவதி
x
தினத்தந்தி 18 Dec 2016 10:00 PM GMT (Updated: 18 Dec 2016 6:47 PM GMT)

கடமலை–மயிலை ஒன்றியத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களால் கர்ப்பிணி பெண்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேனி மாவட்டம் கடமலை–மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது

கடமலைக்குண்டு,

கடமலை–மயிலை ஒன்றியத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களால் கர்ப்பிணி பெண்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்

தேனி மாவட்டம் கடமலை–மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு சிங்கராஜபுரம், கீழபூசணூத்து, மேலபூசணூத்து, வருசநாடு, முத்துநகர், அரண்மனைப்புதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காய்ச்சல், தலைவலி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சிங்கராஜபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த சுகாதார நிலையம் வாரத்தில் திங்கள் கிழமை தவிர மற்ற நாட்கள் பெரும்பாலும் சுகாதார நிலையம் திறக்கப்படுவதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடமலைக்குண்டு மற்றும் வேறு கிராமங்களில் அமைந்துள்ள சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது.

கர்ப்பிணி பெண்கள் அவதி

இதனால் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேறு கிராமங்களுக்கு சென்று வருவதை விரும்பாமல், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சுகாதார நிலையம் தொடர்ந்து பூட்டிய நிலையிலேயே உள்ளதால் கட்டிடங்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல கடமலை–மயிலை ஒன்றியத்தில் மயிலாடும்பாறை, முருக்கோடை உள்ளிட்ட சில கிராமங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் பெரும்பாலான நாட்கள் பூட்டியே கிடக்கிறது.

கோரிக்கை

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை–மயிலை ஒன்றியத்தில் சிங்கராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story