காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் பலி


காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-19T01:27:52+05:30)

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிள்கள் மோதல் வேலூர் மாவட்டம் ஓச்சேரியை சேர்ந்தவர் ஷெரீப் (வயது 41). இவர் காஞ்சீபுரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவர் தனது கடைய

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

வேலூர் மாவட்டம் ஓச்சேரியை சேர்ந்தவர் ஷெரீப் (வயது 41). இவர் காஞ்சீபுரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவர் தனது கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஓச்சேரிக்கு சென்று கொண்டிருந்தார்.

காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி பைபாஸ் ரோடு சந்திப்பில் சென்றபோது இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே ஆற்காட்டில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

3 பேர் சாவு

இதில் ஷெரீப் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆற்காடு கஸ்பாவை சேர்ந்த கட்டிட தொழிலாளிகளான முத்துக்குமரன் (30), ராஜா (42) இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இருவரையும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் முத்துக்குமரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ராஜா காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மேற்பார்வையில் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் சுக்குநூறாக உடைந்தன.


Next Story