செங்குன்றத்தில் ‘வார்தா’ புயலால் நவீன அரிசி ஆலைகள் சேதம் அரிசி விலை உயரும் அபாயம்


செங்குன்றத்தில் ‘வார்தா’ புயலால் நவீன அரிசி ஆலைகள் சேதம் அரிசி விலை உயரும் அபாயம்
x
தினத்தந்தி 18 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-19T01:42:29+05:30)

செங்குன்றத்தில் ‘வார்தா’ புயலால் நவீன அரிசி ஆலைகள் சேதம் அடைந்தன. இதனால் அரிசி விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அரிசி ஆலைகள் சேதம் செங்குன்றத்தில் 150–க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. ஆந்திர மாநிலம் மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவ

செங்குன்றம்,

செங்குன்றத்தில் ‘வார்தா’ புயலால் நவீன அரிசி ஆலைகள் சேதம் அடைந்தன. இதனால் அரிசி விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

அரிசி ஆலைகள் சேதம்

செங்குன்றத்தில் 150–க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. ஆந்திர மாநிலம் மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் விளைவிக்கப்படும் நெல் மூட்டைகள் செங்குன்றத்தில் உள்ள நவீன அரிசி ஆலைகளில் அரைக்கப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 75 சதவீத மக்களுக்கு அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘வார்தா’ புயல் காரணமாக செங்குன்றத்தில் உள்ள 7 நவீன அரிசி ஆலைகள் தரைமட்டம் ஆகின. மேலும் 50 சதவீத நவீன அரிசி ஆலைகள் சேதம் அடைந்தன.

விலை உயரும் அபாயம்

அரிசி ஆலைகள் சேதம் அடைந்துவிட்டதால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரிசி விலை தற்போது உள்ள விலையை விட மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் இந்த அரிசி ஆலைகளில் நேரடியாக 2 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். ஆலைகள் இயங்காததால் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

இதையடுத்து நெல், அரிசி வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம், சங்க தலைவர் துரைசாமி தலைமையில் செங்குன்றத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட அரிசி ஆலைகளுக்கு சீரமைப்பு பணிகளுக்காக 50 சதவீதம் மானியமாக வழங்கவேண்டும். வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் தவணை தொகையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆலைகளுக்கு காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும். வங்கிகளில் பணம் செலுத்தவோ, பணம் எடுக்கவோ வங்கிகள் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.


Next Story