அண்ணா சாலை அருகே கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்


அண்ணா சாலை அருகே கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-19T01:42:44+05:30)

சென்னை அண்ணா சாலை அருகே கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. உதிரி பாகங்கள் சென்னை அண்ணா சாலை அருகே உள்ள ஜெனரல் பேட்டர்ஸ் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான 3 மாட

சென்னை

சென்னை அண்ணா சாலை அருகே கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

உதிரி பாகங்கள்

சென்னை அண்ணா சாலை அருகே உள்ள ஜெனரல் பேட்டர்ஸ் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் சொகுசு கார்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.

நேற்று அதிகாலை 5 மணியளவில் இந்த கடையில் திடீரென தீப்பற்றியது. இதை பார்த்த அருகில் உள்ள பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மின்கசிவு

தகவலின் பெயரில் திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் எழும்பூர் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று கடையின் பூட்டை உடைத்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

இந்த சம்பவம் குறித்து அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர், முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story