புதிய கல்வி கொள்கை- ‘நீட்’ நுழைவு தேர்வை எதிர்த்து திருச்சி உள்பட 9 இடங்களில் 30-ந் தேதி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவிப்பு


புதிய கல்வி கொள்கை- ‘நீட்’ நுழைவு தேர்வை எதிர்த்து திருச்சி உள்பட 9 இடங்களில் 30-ந் தேதி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2016 11:00 PM GMT (Updated: 18 Dec 2016 8:46 PM GMT)

புதிய கல்வி கொள்கை- ‘நீட்’ நுழைவு தேர்வை எதிர்த்து திருச்சி உள்பட 9 இடங்களில் 30-ந் தேதி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவிப்பு

திருச்சி,

புதிய கல்வி கொள்கை- ‘நீட்’ நுழைவு தேர்வை எதிர்த்து திருச்சி உள்பட 9 இடங்களில் 30-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

மாநாடு

திராவிடர் கழகம் சார்பில் புதிய கல்வி கொள்கை- ‘நீட்’ நுழைவு தேர்வு ஆகியவற்றை எதிர்த்து முத்தரப்பு மாநாடு திருச்சி தென்னூர் உழவர்சந்தையில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு திராவிடர் கழக தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் கல்விக்கு நிதி ஒதுக்குவது என்பது சமுதாய முதலீடாகும். இந்த முதலீடு 6 சதவீதம் என அறிவிக்கப்பட்டாலும் நடைமுறையில் 3.6 சதவீதம் மட்டும் தான் உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஒதுக்கும் கல்வி நிதி குறைவாக உள்ளது. 84 சதவீதம் மாநில அரசே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு தானாக முடிவு செய்து புதிய கல்வி கொள்கை திட்டத்தை தயாரித்துள்ளது. இதனை நாம் எதிர்க்க தொடங்கியதும் மத்திய அரசு புதிய கல்வி திட்டத்தை நாங்கள் இன்னும் முடிவு பண்ணவில்லை என கூறியுள்ளனர். இது தான் நமக்கு கிடைத்த முதல் வெற்றி. ‘நீட்’ நுழைவு தேர்வு மாநில அரசின் கல்வியை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. ‘நீட்’ நுழைவு தேர்வு நமது மாணவ-மாணவிகளை பாதிக்கும். எனவே புதிய கல்வி கொள்கை மற்றும் ‘நீட்’ நுழைவு தேர்வை எதிர்த்து முதல் கட்டமாக வருகிற 30-ந்தேதி திருச்சி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, சேலம், கோவை, தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர் ஆகிய 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மாணவர், பெற்றோர், ஆசிரியர் என முத்தரப்பினர் பங்கேற்பார்கள். அதன்பின் மற்ற நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானங்கள்

மாநாட்டில், மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும், மருத்துவ கல்வி சேர்க்கைக்கு ‘நீட்’ என்ற அகில இந்திய நுழைவு தேர்வு நடத்தப்படுவதை கைவிட வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி உள்பட ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர், திராவிடர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story