கும்பகோணம் அருகே தொழிலாளி மீது தாக்குதல் 2 பேருக்கு வலைவீச்சு


கும்பகோணம் அருகே தொழிலாளி மீது தாக்குதல் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Dec 2016 8:46 PM GMT (Updated: 2016-12-19T02:16:09+05:30)

கும்பகோணம் அருகே தொழிலாளி மீது தாக்குதல் 2 பேருக்கு வலைவீச்சு

கும்பகோணம்,

கும்பகோணம் அருகே உள்ள சந்தனாள்புரம் பூம்புகார் சாலையை சேர்ந்தவர் ஞானசேகர். இவருடைய மகன் பிரதீப்(வயது30). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லூயிஸ்ராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று சத்திரம் கருப்பூர் ஆற்றங்கரை அருகே பிரதீப் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த லூயிஸ்ராஜ் மற்றும் அவரது நண்பர் அடைக்கல ரமேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து இரும்பு பைப்பால் பிரதீப்பை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பிரதீப் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லூயிஸ்ராஜ், அடைக்கலரமேஷ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story