ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் வர்த்தகர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் வர்த்தகர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-19T02:16:10+05:30)

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் வர்த்தகர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

கும்பகோணம்,

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என வர்த்தகர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

கும்பகோணம் வர்த்தகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் நியமனம் ஆகியவை கும்பகோணத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு நெல்-அரிசி வியாபாரிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.குருநாதன் தலைமை தாக்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது, புதிய முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்து தெரிவிப்பது, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். வரலாற்று சிறப்பு பெற்ற கும்பகோணம் மூா்த்தி கலையரங்கத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை வைக்க வேண்டும். விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை உள்ள புற வழிச்சாலை திட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்புகள்

வர்த்தகர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கும்பகோணம்-ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் புதிய ரெயில்பாதை திட்ட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கும்பகோணம் நகரை சுற்றியுள்ள புற வழிச்சாலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். கும்பகோணம்-தஞ்சை சாலையில் உள்ள வேகத்தடையின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் புதிய தலைவராக சேகரும், பொதுச்செயலாளராக ரமேஷ், பொருளாளராக பிரபு, கவுரவத்தலைவராக சின்னப்பவும், துணைத்தலைவர்களாக குருநாதன், முனியப்பன், சங்கரநாராயணன் மற்றும் நிா்வாகிகளாக முகமது அன்சாாி,ரவிக்குமாா்,முருகன், சம்பத்குமாா், பாலகிருஷ்ணன், ஜெயசீலன், கண்ணன், நாகநாதன் ஆகியோா் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Next Story