அரியலூர் மாவட்ட சாலை பணியாளர்கள் சங்க கூட்டம்


அரியலூர் மாவட்ட சாலை பணியாளர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2016 8:47 PM GMT (Updated: 2016-12-19T02:17:12+05:30)

அரியலூர் மாவட்ட சாலை பணியாளர்கள் சங்க கூட்டம்

அரியலூர்,

அரியலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம் அரியலூரில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்ராஜ், ராமசாமி உட்படபலர் பேசினர். கூட்டத்தில் 41 மாத பணிநீக்க காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஞானசம்பந்தம் நன்றி கூறினார்.

Next Story