திருமானூரில் ஊராட்சி ஒன்றிய இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திருமானூரில் ஊராட்சி ஒன்றிய இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-19T02:18:26+05:30)

திருமானூரில் ஊராட்சி ஒன்றிய இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருமானூர்,

திருமானூரில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடம் திருமானூரில் அரியலூர் சாலையின் கீழ்புறம் உள்ளது. இந்த இடத்தில் சுமார் 15 கடைகள் ஒன்றியத்தின் அனுமதியோடு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகளின் பின்புறத்தில் உள்ள காலியிடத்தில் விறகுகள் உள்ளிட்ட சில பொருட்களை போட்டு சிலர் ஆக்கிரமித்து இருந்தனர்.

இந்த இடத்தின் அருகில் குழந்தைகளின் ஊட்டச்சத்து மைய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகளால் ஊட்டச்சத்து மைய அலுவலகத்திற்கு வரும் அலுவலர்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி உதவி இயக்குனர் கங்காதரணி நேரில் பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அதன்படி ஆக்கிரமிப்புகள் பொக்ளின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தொடர்ந்து வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகள் அந்தந்த நபர்களிடம் உள்ளதா வேறு நபர்களிடம் உள்ளதா எனவும், வாடகைகள் குறித்தும் ஊராட்சிஉதவி இயக்குனர் கேட்டறிந்தார்.

ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான இடங்களில் வேறு ஏதும் ஆக்கிரமிப்புகள் உள்ளதா எனவும் அவர் ஆய்வு மேற்கொண்டார். ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது வட்டாரவளர்ச்சி துறை அலுவலர்கள் ஜாகிர்உசேன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரைச்செல்வி, ஊராட்சி உதவியாளர் ராவனேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story