மகப்பேறு நிதியை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் கட்டுமானம்-அமைப்புசாரா தொழிலாளர்கள் வலியுறுத்தல்


மகப்பேறு நிதியை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் கட்டுமானம்-அமைப்புசாரா தொழிலாளர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 18 Dec 2016 8:48 PM GMT)

மகப்பேறு நிதியை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் கட்டுமானம்-அமைப்புசாரா தொழிலாளர்கள் வலியுறுத்தல்

பெரம்பலூர்,

தொழிலாளர் மகப்பேறு நிதியை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. நிறுவன தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் சின்னதுரை முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் அருண்குமார், கழக ஆலோசகர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். மாநில பொருளாளர் சுகந்தி ஈஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். இளைஞரணி தலைவர் ராமஜெயம், கொள்கை பரப்பு செயலாளர் பாலசந்தர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ஓய்வூதியம்

கூட்டத்தில், கட்சி மற்றும் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது, புதிய ஆண்டிற்கான செயல்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், ஜெயலலிதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது, கட்டுமான தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம்-சீருடை வழங்கப்படாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது, தொழிலாளர் மகப்பேறு நிதி ரூ.6 ஆயிரத்தை சுகாதார துறையில் வழங்குவதைபோல் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளி, அமைப்பு சாரா தொழிலாளி விபத்தின் போது இறந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கட்டிட வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். கல்லுடைக்கும் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், போட்டோ- வீடியோ கிராபர் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ், மகளிர் அணி செயலாளர் நஜ்மா பேகம் உள்பட சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Next Story