போலீசார்- பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேச்சு


போலீசார்- பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேச்சு
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-19T02:18:29+05:30)

போலீசார்- பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேச்சு

திருவாரூர்,

போலீசார்-பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கூறினார்.

பயிற்சி முகாம்

திருவாரூர் மாவட்ட போலீசாருக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருவோர்களிடம் கனிவாக பேச வேண்டும். பொதுமக்களின் காவலராக செயல்பட வேண்டும். பெறப்படும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதில் எந்தவித பேதமின்றி போலீசார் செயல்பட வேண்டும். போலீசார்-பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்த வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

சான்றிதழ்

முகாமில் உளவியல் குறித்து டாக்டர் பாக்கியலட்சுமி, சட்டம் குறித்து வக்கீல் சதீஷ்குமார், நல்லுறவு குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், இளம் சிறார்கள் பிரச்சினைகள் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்புதுறை அலுவலர் சபீதா, முத்தமிழ்ச்செல்வி, காவல் தொழில்நுட்பத்துறை குறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முகாம் நிறைவில் பயிற்சி பெற்றவர்களுக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அப்துல்லா சான்றிதழ் வழங்கினார்.

Next Story