தக்கலை அருகே கால்வாயில் கவிழ்ந்த கார் தனியார் நிதிநிறுவன ஊழியர் படுகாயம்

தக்கலை அருகே கால்வாயில் கவிழ்ந்த கார் தனியார் நிதிநிறுவன ஊழியர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-19T02:19:29+05:30)

தக்கலை அருகே கால்வாயில் கவிழ்ந்த கார் தனியார் நிதிநிறுவன ஊழியர் படுகாயம்

தக்கலை,

தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் தனது காரை அந்த பகுதியில் உள்ள கால்வாய் கரையோரமாக சாலையில் ஓட்டி சென்றார். அப்போது, திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி சென்றவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story