பயிர்கள் கருகியதால் வயலில் மயங்கி விழுந்து விவசாயி சாவு நாகை மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு


பயிர்கள் கருகியதால் வயலில் மயங்கி விழுந்து விவசாயி சாவு நாகை மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-19T02:19:34+05:30)

பயிர்கள் கருகியதால் வயலில் மயங்கி விழுந்து விவசாயி சாவு நாகை மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

வாய்மேடு,

வாய்மேடு அருகே பயிர்கள் கருகியதால் வயலில் மயங்கி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து நாகை மாவட்டத்தில் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

விவசாயி சாவு

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி பழமுதிர்சோலை பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது80). விவசாயி. இவர் அதே பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் சம்பா நேரடி நெல்விதைப்பு செய்திருந்தார். இந்தநிலையில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததாலும், போதிய மழை பெய்யாததாலும் வயலில் சாகுபடி செய்துள்ள பயிர்கள் கருகின. இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்ற வைத்தியநாதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவருடைய மகன் முனியப்பன் வயலுக்கு சென்று பார்த்தார். அப்போது வைத்தியநாதன் வயலில் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்றனர். வைத்தியநாதன் பயிர்கள் கருகியதை பார்த்து அதிர்ச்சியில் வயலிலேயே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இறந்துபோன வைத்தியநாதனுக்கு 6 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். பயிர்கள் கருகியதால் நாகை மாவட்டத்தில் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story