தேவைக்கு அதிகமாக உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தல்


தேவைக்கு அதிகமாக உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-19T03:39:23+05:30)

புதுச்சேரி, தேவைக்கு அதிகமாக உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையை வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நல்ல முடிவு புதுச்சேரிய

 

புதுச்சேரி

புதுவையில் தேவைக்கு அதிகமாக உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையை வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நல்ல முடிவு

புதுச்சேரியில் மதுக்கடைகளால் பாதிப்பு இல்லை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறுவதில் உள்நோக்கம் உள்ளது. தனது கட்சியினர் நடத்தும் மதுக்கடைகளுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற காரணத்தினாலேயே இப்படி கூறுகிறார். பொதுமக்களைப்பற்றி அவர் கவலைப்படவில்லை.

புதுவையில் நெடுஞ்சாலைகளில் இயங்கும் மதுக்கடைகளால் அதிக அளவில் சாலை விபத்துகளும், கொலை மற்றும் கொள்ளைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று நெடுஞ்சாலைகளில் இயங்கும் மதுபான கடைகளை அரசு அகற்ற வேண்டும். புதுவை மாநிலம் இளம் விதவைகளை கொண்ட மாநிலமாக திகழ்வதால் புதுச்சேரியின் வருமானத்தை மட்டும் காரணம் காட்டாமல் இந்த பிரச்சினையில் நல்ல முடிவை எடுக்கவேண்டும்.

சட்ட விரோத கடைகள்

மதுவை படிப்படியாக குறைக்கும் வகையில் பல மாநிலங்களில் மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், நேரத்தையும் குறைத்து வருகின்றனர். அதேபோல் புதுச்சேரியிலும் தேவைக்கு அதிகமாக உள்ள மதுபான கடைகளை குறைக்கவேண்டும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நடைமுறைப்படுத்த கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுவையில் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் முறையான அனுமதி பெறாமலும் சட்டவிரோதமாக பல மதுக்கடைகள் இயங்குகின்றன. அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் கலால்துறை ஊழல் நிறைந்த துறையாக உள்ளது. எனவே உடனடியாக அனைத்து கடைகளிலும் ஆவணங்களை ஆய்வுசெய்யவேண்டும்.

சட்டப்பூர்வ நடவடிக்கை

மதுவால் கிடைக்கும் வருமானத்தை மட்டும் பார்க்காமல் விபத்துகளுக்கான சிகிச்சை செலவுகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஆகியவற்றால் அரசுக்கு ஆகும் செலவுகளையும் ஆராய்ந்து புதுச்சேரி அரசு செயல்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு ஆணையை மதிக்காவிட்டால் முதல்–அமைச்சர் மற்றும் கலால்துறை அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க பாரதீய ஜனதா வலியுறுத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story